(க.கிஷாந்தன்)

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரச வங்கிகளுக்கு அநீதிகள் ஏற்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் சேவையாளர்கள் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியலாம் ஹட்டன் நகரில் மக்கள் வங்கிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வரவு செலவு திட்டத்தில் அரச வங்கி சேவையாளர்களுக்கு ஊழியர் சேமநல நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வுநிதியம் என முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், இந்த வரவு செலவு திட்டத்தில் சேவையாளர்களுக்கு எவ்வித சலுகைகள் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச வங்கி சேவையாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.