சட்டவிரோத மணல் அகழ்வை  தடுக்க இராணுவத்தின் உதவி நாடப்படும் - அரச அதிபர் 

Published By: Digital Desk 4

18 Aug, 2020 | 03:00 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத  மணல் அகழ்வை தடுக்க இராணுவத்தின் உதவியை நாடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (18) கிளிநொச்சி  மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை  ஊடகங்கள் உட்பட பலரும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். 

குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சட்டவிரோத மணல் அகழ்வால்  குளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவே  இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியை  பெறவுள்ளதாகவும். இது தொடர்பில் நாளை புதன்(19) கிழமை கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதியை சந்தித்துகலந்துரையாடவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு,  பன்னங்கண்டி,  கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, தட்டுவன்கொட்டி, ஊற்றுப்புலம், அக்கராயன், கிளாலி, முகமாலை, சோரன்பற்று, புளோப்பளை, மற்றும் பளையின் மேலும் பல பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் சட்டவிரோத  மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21