ஹெரோயின்,கோடாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது

Published By: Digital Desk 4

18 Aug, 2020 | 11:31 AM
image

(செய்திப்பிரிவு)

நாட்டில் பல பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் மற்றும் கோடாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிந்தெனிய

பிந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவத்த பகுதியில் திங்கட்கிழமை முற்பகல் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கேகாலை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்க முற்பட்டிருந்த நிலையில்   பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமை கைது செய்யப்பட்டார்.  இதன் போது சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 350 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வீட்டை மேலும் சோதனைக்கு உட்படுத்திய போது 5 கைத்தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்ற  26,000 ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொடியாகும்புர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கல்கிஸ்ஸ

கல்கிஸ்ஸ - ஒடியன் சந்தி பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிரிய

இங்கிரிய - குரண கல்கந்த வீதியில்  பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும்  கோடா 1137 லீற்றர், பீப்பாய்கள், எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஹந்தபான்கொட - இங்கிரிய பகுதியை; சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33