பாதையாத்திரைக்கான பணிகள் மும்முரம்;மங்கள விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திப்போம்;தினேஷ் தகவல்

Published By: Raam

12 Jul, 2016 | 08:08 AM
image

தேசிய பாதுகாப்பு , மத விவகாரம் , அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் நிழல் அமைச்சரவைக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அடுத்த பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில்  துறைசார் அமைச்சர்களிடம் கேள்வியெழுப்ப திட்டமிட்டுள்ளோம்.  அதற்கு முன்னர் நிழல் அமைச்சரவையின் கன்னி அமர்வும் ஊடக சந்திப்பும் விரைவில் நடத்தப்படும் என கூட்டு எதிர் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

வெளிவிவகார அமைச்சருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கும்  28 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பை நோக்கிய பேரணியை வெற்றிகரமாக முன்னெடுக்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பிரகாரம் நிழல் அமைச்சரவையின் உறுப்பினர்கள் தமது பணிகளில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விடயம் தொடர்பில் கூட்டு எதிர் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் கூறுகையில் , 

நாளொன்றுக்கு 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் நிழல் அமைச்சரவைக்கு கிடைப்பெறுகின்றன. தேசிய பாதுகாப்பு , மத விவகாரங்கள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அரசியல் விடயங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விடயங்கள் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு  ஆராய்கின்றோம்.  எவ்விதமான பிரச்சினையும் இன்றி கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு உரிய பணிகளை சிறந்த வகையில் முன்னெடுக்கின்றனர். அனுபவம் உள்ள மூத்த உறுப்பினர்கள் தேவையான வழிநடத்தல்களை வழங்குகின்றனர். அத்துடன் எமது தேசிய தலைவரான மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களின் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதிலும் அவற்றை மக்களுக்கு வெளிப்படுத்துவதிலும் நிழல் அமைச்சரவைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். 

மேலும் வெளிவிவகார அமைச்சரின் தன்னிச்சையானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயற்பாடுகள் குறித்து கூட்டு எதிர்க் கட்சி அவதானித்துள்ளது. குறிப்பாக சர்வதேச நீதிபதிபகளின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.  ஏனெனில் ஜனாதிபதியை மீறி செயற்படும் அதிகாரம் அவருக்கு கிடையாது. இந்த விடயம் குறித்து கடினமான நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க எதிர்பார்த்துள்ளளோம். அதே போன்று நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் மாற்று அரசியல் தேவையை வலியுறுத்தியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பாதையாத்திரை திட்டமிட்டப்படி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இருந்து முன்னெடுக்கப்பட உள்ளது. 

எவ்வாறாயினும் அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நிழல் அமைச்சரவையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் குறித்து துறைசார் அமைச்சர்கள் வாய்மூல பதிலளிப்பிற்கான நேரம்  சபாநாயகரிடம் கோரப்பட உள்ளது. மேலும் பொது மக்களுக்கு நிழல் அமைச்சரவையின் செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தும் சந்திப்புகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58