வெலிமடையில் 14 குடியிருப்புக்கள் தீக்கிரை

Published By: Digital Desk 4

17 Aug, 2020 | 07:28 PM
image

வெலிமடைப் பகுதியின் வோர்விக்  பெருந்தோட்ட மார்ட்டின் பிரிவு இலக்கம் 7 குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 14 குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளன.

No description available.

இன்று 17.08.2020 முற்பகல் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ வரிசைக் குடியிருப்புக்கள் 14க்கும் பரவியதில் தொழிலாளர்களின் உடமைகள் அனைத்தும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறாத போதிலும்,பெரும் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

No description available.

இதனையடுத்து பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவத்தினர் விரைந்து  சேதங்களுக்குள்ளான 14 குடும்பங்களின் 64 பேர் வோர்விக் பெருந்தோட்ட தோட்ட சிறுவர் சமூக பராமரிப்பு நிலையத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவு வகைகள் இடர் முகாமைத்துவ பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளன.

No description available.

பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆண்களும்  29 பெண்கள் மற்றும் சிறுமிகள் 15 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்ககியுள்ளனர்.

இத் தீ மின்சாரக் கசிவினால் ஏற்பட்டதென்று மின்சார சபையினர் மற்றும் பொலிஸாரின் விசாரனைகளிலிருந்து தெரியவருகின்றது.

No description available.

வெலிமடை மற்றும் அம்பகஸ்தோவை  ஆகிய இடங்களில் பொலிசார்,மேற்படி தீச் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமான் உடனடியாக விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அனைத்துஉட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

No description available.

அத்துடன் அவர் பகுதி பிரதேச செயலாளர்,இடர் முகாமைத்துவ பணிப்பாளர்,தோட்ட முகாமையாளர்,ஆகியோருடனான சந்திப்பினை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் குறித்து,கலந்துரையாடி ஆக்கப்பூர்வ வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

No description available.

இச் சம்பவம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெருந்தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்கும்,பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் கொண்டு சென்றுள்ளார்.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33