நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பரபரப்பு 

Published By: Priyatharshan

17 Aug, 2020 | 04:44 PM
image

"கதவைத் திற காற்று வரட்டும்" என்ற வார்த்தைகள் மூலம் பலரைக் கவர்ந்தவர் நித்தியானந்தா. இவரை அறியாதவர்கள் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. வார்த்தைகளால் மாத்திரமன்றி தனது செயல்களாலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தென் இந்தியாவின் பெரும் பணக்கார சாமியாரான நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இளம் பெண்கள் ஆண்கள் என நிறைந்து போய் இருந்தனர். இவர்களுக்கு உணவு உட்பட அனைத்தையும் வழங்கி தனது படையணியை பாதுகாத்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு எதிராக மோசடி, ஊழல், கடத்தல் ,பாலியல் துஸ்பிரயோகம் என அடுத்தடுத்து வழக்குகள் வந்தபோதும் அனைத்தையும் எதிர்கொண்டு தென்னிந்தியாவிலேயே இருந்து வந்தார்.

 எனினும் நிலைமை மோசமடைந்து இந்திய அரசும் புலனாய்வுப் பிரிவும் இவரை கைதுசெய்ய தேடிய போது திடீரென தலைமறைவானார்  .

இருந்தும் கூட அவ்வப்போது தனது வலைப்பதிவில் பதவிகளை அவர் வெளியிட்டு வருவது பலருக்கும் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

தற்பொழுது சாமியார் நித்யானந்தா கைலாசா நாட்டுக்கான தனி வங்கி உருவாக்கி இருப்பதாகவும் விநாயகர் சதுர்த்தி அன்று இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுவாமி நித்தியானந்தா பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள போதிலும் அவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியாது தடுமாறி வருகிறது இந்திய அரசு.

சில மாதங்களுக்கு முன்பு கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி தானே பிரதமர் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கைலாசா  பாஸ்போர்ட்டை அறிவித்தார். தனது நாட்டில் குடியேற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தற்பொழுது கைலாசாவுக்காக தனி வங்கி, தனி கரன்சி என்பவற்றையும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ரிசர்வ் பேங்க் கைலாசா ஊடாக பல நல்ல காரியங்களை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்  நித்தியானந்தா.

இவையாவும் சட்டப்படியே செயல்படும் என்றும் மேலும் 300 பக்க பொருளாதாரக் கொள்கை ஒன்றும்  தயார் செய்யப்பட்டுள்ளது  என்றும் கூறியுள்ளார்.

கைலாசாவுக்கான கரன்சியின் பெயர் வடிவமைப்பு யாவும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

நித்தியானந்தா எங்கே ? எந்த தீவில்? உள்ளார் என்று தெரியாத போதிலும் அவர் மெக்சிக்கோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவு நாடான பெலிசில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அதுவும் உறுதி இல்லை.

கர்நாடகா, குஜராத் நீதிமன்றங்களில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் உள்ள போதும் அவை எதுவும் குறித்து கவலை இன்றி தனது வலைத்தள பக்கங்களில் ஆன்மீக உரைகள் மூலம் சக்கைப்போடு போடுகிறார் நித்தியானந்தா.

சர்வதேச பொலிஸார் நித்தியானந்தாவுக்கு எதிராக 'ப்ளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பன் எப்படி இந்தியா பொலிசாருக்கு சவாலாக விளங்கினாரோ, நித்தியானந்தா அதையும் விட ஒரு படி மேல் சென்று விட்டார்.

உண்மையில் பொலிசாரால் இவரைப் பிடிக்க முடியவில்லையா அல்லது அவ்வாறு பாசாங்கு செய்கிறார்களா? என்பது அந்த கைலாசாவுக்கே வெளிச்சம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43