வடக்கு கிழக்கில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்: செஹான் சேமசிங்க  

Published By: J.G.Stephan

17 Aug, 2020 | 01:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன்  திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  நிவாரணம் வழங்கப்படும். இப்பிரதே மக்கள் பொருளாதார ரீதியில் சுயமான முன்னேற்றமடைவதற்கு சுய கைத்தொழில் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படும். என சமுர்த்தி, மனைப்பொருளாதார , நுண்நிதி  சுயத்தொழில் , தொழிலபிவிருத்தி, மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டங்களினால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. வடக்கு  மற்றும்  கிழக்கு  மாகாணங்களில் வாழும் தமிழ்-முஸ்லிம் பொதுஜன பெரமுனவிற்கு இம்முறை  ஆதரவு வழங்கி தமிழ் அரசியல் கட்சிகளை புறக்கணித்துள்ளார்கள். கடந்த அரசாங்கத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

 மாகாண சபை முறைமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வகையான   நன்மைகளை பெற்றுக் கொடுத்துள்ளன என்பது ஆராயப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்த  தமிழ் தேசிய  கூட்டமைப்பு  மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் கவனம் செலுத்தவில்லை.  பலவீனமான அரசாங்கத்தை  பாதுகாப்பதற்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நுண்கடன் திட்டம் பெரிதும் பாதிப்பினை  ஏற்டுத்தியுள்ளது. கடன் சுமைகளினால் பாதிக்கப்பட்ட  பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதுடன் நிதி நிறுவனங்களினால் உளவியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி கோத்தாபய    ராஜபக்ஷ தலைமையிலான  இடைக்கால அரசாங்கத்தில்  இவ்விடய ம் தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டது.

 நுண்கடன் திட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய வங்கி  ஊடாக  நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் சுயமாக முன்னேற்றுவதற்கான சூழல்  ஏற்படுத்திக்  கொடுக்கப்படும். சுயகைத்தொழில்  துறையை  விருத்தி  செய்வதற்கு  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21