ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; இந்திய பாதுகாப்பு படையின் மூவர் பலி

Published By: Vishnu

17 Aug, 2020 | 12:26 PM
image

இந்திய, ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள சேதனைச் சாவடியொன்றில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவரும், ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த இரு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில் தாக்குதலில் பலத்த காயமடைந்த இரு பாதுகாப்பு உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி விஜய்குமார் உறுதிப்படுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி பகுதியில் மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கியே இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை கைது செய்ய படைகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதுடன், சம்பவம்  நடைபெற்ற இடத்தையும் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் பல்வேறு மோதல்களில் கிட்டத்தட்ட 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அதேநேரம் 2019 இல் 157 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17