(ரொபட் அன்டனி)
வற்வரி அதிகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது அரசாங்கத்தின் வரி சேகரிக்கும் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என  நம்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தேவையான மற்றும் பொருத்தமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை வற்வரி அதிகரிப்பும், தேசத்தை கட்டியெழுப்பும் வரியை அமுல்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானமானது அரசாங்கத்தின் வரி சேகரிக்கும் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கின்றேன். 

வற்வரி அதிகரிப்பு சட்டமூலமானது ஜூலை மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

தேசிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை பலம் இருக்கின்றது அந்தவகையில் இம் மாதம் இறுதிக்குள் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன்பின்னர் 2016 மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து இந்த சட்டமூலம் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.