இந்தியாவில் திருப்பூரை சேர்ந்தவர் சரவணன் மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. படிக்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார்.

இதனால் டெல்லி கவுதம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று காலை சரவணன் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இதுபற்றி தெற்கு டெல்லி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பொலிஸார் விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி மேற்கொண்ட பரிசோதனையில்  விஷ ஊசி போட்டு சரவணன் இறந்திருப்பது தெரியவந்தது. மருத்துவ படிப்புக்கு சேர்ந்த 10 ஆவது நாளிலேயே அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் தற்கொலை செய்யும் எண்ணத்தில் அவரே விஷ ஊசி போட்டு கொண்டாரா? அல்லது வேறு யாரும் அவருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார்களா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதைதொடர்ந்து  சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத அறிக்கை கிடைத்த பிறகு சரவணனின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்தனர்.