வறுமையை  முற்றாக இல்லாதொழிப்பதே  அரசாங்கத்தின் பிரதான இலக்கு - பஷில் ராஜபக்ஷ

Published By: Digital Desk 4

16 Aug, 2020 | 04:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய  பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும்,   சுபீட்சமான  எதிர்கால கொள்கை  திட்டத்தை முழுமையாக  செயற்படுத்தவும்   கிடைக்கப் பெற்றுள்ள  மூன்றில் இரண்டு பெரும்பான்மை   பலத்தை முறையாக பயன்படுத்துவோம். 

வறுமையினை  முற்றாக இல்லாதொழிப்பது  அரசாங்கத்தின் பிரதான இலக்கு என  பொருளாதார புத்தாக்கம், வறுமை   ஒழிப்பு  தொடர்பான ஜனாதிபதி செயலணியின்   தலைவர்   பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் தொழிற்துறை  நிபுணர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்   மேலும் குறிப்பிடுகையில்,

பாரிய   எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மக்கள்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை  ஆதரவை   வழங்கியுள்ளார்கள்.   .  மக்கள் அரசாங்கத்தின் மீது     பாரிய  எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளார்கள்.   இறக்குமதி  பொருளாதாரத்தை     மட்டுப்படுத்தி  ஏற்றுமதி பொருளாதாரத்தை   வலுப்படுத்துவதே   பிரதான  எதிர்பார்ப்பாக உள்ளது.

தேசிய  உற்பத்திகளை மேம்படுத்தவே  பாரம்பரிய  உற்பத்திகளுக்காக    இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டடுள்ளன.  அமைச்சர்கள்  6 மாத காலத்திற்குள்  அமைச்சின் முன்னேற்றம்,  எதிர்கால திட்டங்கள் தொடர்பில்   ஜனாதிபதிக்கு அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும் என   ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளது.

 தேசிய உற்பத்திகளை  வலுப்படுத்தவும்,    ஜனாதிபதியின் சுபீட்சமான எதிர்காலம் கொள்கை  திட்டம்  செயற்படுத்தவும் கிடைக்கப் பெற்றுள்ள  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு    செயற்படுத்தப்படும்.வறுமையினை  இல்லாதொழிப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

  அதிக   தொழிற்துறையினை   ஏற்படுத்தும்   கல்வி  முறைமையை   அறிமுகப்படுத்த   தொழிற்துறை  நிபுணர்கள் ஆதரவு வழங்க வேண்டும். போட்டித்தன்மையான உலகில்  இளைஞர் யுவதிகள்     சுயமாக  முன்னேற்றமடைவதற்கான சூழல்   ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46