யாழில் இராணுவத்தினரால் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு

Published By: Digital Desk 4

16 Aug, 2020 | 12:41 PM
image

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீட்டில் இருந்த அனைவரது  விவரங்களையும் சேகரித்து அவற்றைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் முன்னாள் போராளிகளின் விவரங்களை இராணுவத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளமை முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீரிமலை பகுதியின் ஜே/226 ,ஜே/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.

முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக முன்னாள் போராளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அப்பகுதி மக்கள் வீட்டிற்கு வந்த ராணுவத்தினரிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் கூற முடியாது எமக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று அவ்விடத்து மக்களிடம் கூறி உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17