ஜேர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் 120 பொலிஸார் காயம்

Published By: Raam

11 Jul, 2016 | 03:17 PM
image

ஜேர்மனியில் கடந்த மாதம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து பொலிஸிற்கு எதிராக தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று மேற்கொண்ட போராட்டத்தில் தீடீரென ஏற்பட்ட மோதலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது  நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடந்தது. அதில் 3500 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் பங்கேற்றவர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் தீப்பந்தங்களை கொண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

அப்போது அப்பகுதியில் வீதியில் நிறுத்தி வகைப்பட்டிருந்த கார்கள் மற்றும் அங்கிருந்த கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது.

எனவே கலவரத்தை அடக்க அங்கு 1800 மேல் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அதில் 120 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டகாரர்கள்  தரப்பில் காயம் அடைந்தவர்கள் விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52