தெளிவான நோக்கம் மற்றும் தொழில் முயற்சியாண்மை திறமை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு செயற்பட்டு வரும் சியோக்கா (பிரைவட்) லிமிடட், கொள்கை ரீதியான முதலீடுகளின் மூலமாக பாரம்பரிய வியாபார நிறுவனம் என்பதிலிருந்து பிரதான பன்முகப்படுத்தப்பட்ட வியாபார ஸ்தாபனமாக மாற்றமடைந்துள்ளது. 

இன்றைய கால கட்டத்தில், இலங்கையின் வியாபாரச் சூழலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சியோக்கா கருதப்படுவதுடன், வளர்ச்சி தொடர்பில் பல்வேறு வழிமுறைகளை இந்நிறுவனம் பின்பற்றி வருவதுடன், துறையின் வளர்ச்சியிலும் சமூகத்தின் உயர்விலும் பங்களிப்பை செலுத்துகிறது. 

வளர்ந்து வரும் பொருளாதாரம் எனும் வகையில், இலங்கையில் காணப்படும் வசதிகளை பயன்படுத்தி, சியோக்கா, சகல பங்காளர்களுக்கும் பெறுமதிகளை சேர்த்து வருகிறது. இதனூடாக, குழுமத்தில் நேர்த்தியான பெறுமதிகள் சேர்க்கப்படுவதுடன், சர்வதேச நிறுவனங்களுடன் உறுதியான பிணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக தனது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

சியோக்கா (பிரைவட்) லிமிடட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹர்ஷித் தர்மதாச கருத்து தெரிவிக்கையில், 

“எமது இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு நாம் உறுதியான நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறோம். ஒவ்வொரு வியாபார பிரிவும் அதன் பிரத்தியேகமான வலிமைகள் மற்றும் சிக்கல் தன்மைகளை கொண்டுள்ளன. பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் வியாபாரச் செயற்பாடுகளை சியோக்கா கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் இயங்கும் சகல துறைகளிலும் இது ஒரு பிரதான செயற்பாட்டாளராக அமைந்துள்ளதுடன், எமது வியாபாரங்களில் இயலுமானவரை பெறுமதிகளை ஏற்படுத்தவும் நாம் முயற்சி செய்கிறோம்” என்றார்.

சியோக்கா ஹெல்த் நிறுவனம் என்பது, சியோக்கா குழுமத்தின் முன்னணி வியாபார செயற்பாடுகளில் ஒரு அங்கமாக அமைந்துள்ளதுடன், தேசத்தின் சுகாதாரத்துறைக்கு அவசியமான மருந்துப் பொருட்களையும், சத்திரசிகிச்சை சாதனங்களையும் இறக்குமதி செய்து விநியோகிக்கிறது. 

அரச மற்றும் தனியார் துறை வைத்தியசாலைகளுக்கு சியோக்கா சுகாதார பிரிவின் சேவைகள் வழங்கப்படுவதுடன், துறையில் பல புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்த பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஊசி இல்லாத தடுப்பூசி வகைகள் அடங்கியுள்ளன. 

இவை நாட்டின் எதிர்கால நோய்த்தடுப்பு வழங்கும் முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அத்துடன், சிறுநீர் கலவைப் பிரிப்பு சேவைகளுக்கான தயாரிப்புகள் போன்றவற்றை ஃபிரெசெனியஸ் மருத்துவ பராமரிப்பு துறையுடன் இணைந்து வழங்கி வருகிறது. 

இந்நிறுவனம், கொடிய சிறுநீரக நோய்க்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு அவசியமான மருந்துப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.  சியோக்கா சுகாதார பிரிவு, பிரேசில் நாட்டின் முன்னணி மருந்தாக்கல் நிறுவனமான யூரோஃபார்மா நிறுவனத்துடன் பிரத்தியேக வணிக உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலமாக இலங்கையில் யூரோஃபார்மா நிறுவனத்தின் மருந்துப் பொருட்களை விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தவும் ஏக சட்டபூர்வமான அங்கீகாரத்தை சியோக்கா ஹெல்த் நிறுவனம் பெற்றுள்ளது.

மிலேனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் 29 சதவீதமான பங்குகளை 2014 ஒக்டோபரில் சியோக்கா என்ஜினியரிங் நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளில் Water Proofing, Insulation, Exteriors, Professional Lighting மற்றும் துறைசார்ந்த சாதனங்கள் இறக்குமதி போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை உயர் சர்வதேச தரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Schneider Electric உடனும் இந்த வியாபார பிரிவு முக்கிய விநியோகஸ்த்தர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. 

இதன் மூலமாக, Schneider Electric இன் உலகத் தரம் வாய்ந்த வலு முகாமைத்துவ சேவைகளையும், ஒளி கட்டுப்படுத்தல் தயாரிப்புகளையும் இலங்கையில் விநியோகிப்பதற்கான அங்கீகாரத்தை சியோக்கா என்ஜினியரிங் நிறுவனம் பெற்றுள்ளது.

Water Proofing துறையில் சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் சில நிறுவனங்களுடனும் சியோக்கா என்ஜினியரிங் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதில் Green Seal Products (M) Sdn Bhd மற்றும் Dulux குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Selleys Australia போன்றன அடங்கியுள்ளன. 

பெருமைக்குரிய Keells ‘Waterfront Project’ செயற்திட்டத்துக்கான waterproofing தீர்வுகள் விநியோகஸ்த்தராக சியோக்கா என்ஜினியரிங் நிறுவனம் இயங்குகிறது. சியோக்கா என்ஜினியரிங் நிறுவனம் நாட்டின் முன்னணி Insulation விசேட நிபுணராகவும் திகழ்வதுடன், பல்வேறு Insulation தீர்வுகளை இறக்குமதி செய்து விநியோகிப்பதிலும் சந்தை முன்னோடியாக திகழ்கிறது. 

நிலைபேறான கட்டிட செயற்பாடுகளுக்கு தனது அர்ப்பணிப்பாக சியோக்காவின் பொறியியல் பிரிவு அண்மையில் பெருமைக்குரிய CIOB Green Mark Gold தங்க விருதை Ceylon Institute of Builders (CIOB) இடமிருந்து பெற்றிருந்தது. கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த, நிலைபேறான மற்றும் பிரத்தியேகமான வெளிப்புற உயர் அழுத்தம் நிறைந்த Laminate படல்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சியோக்கா குழுமத்தின் விவசாய வணிக பிரிவான நவலோக அக்ரி (பிரைவட்) லிமிடட் செயற்படுவதுடன், இந்தப்பிரிவின் மூலமாக உயர் தரம் வாய்ந்த மற்றும் புத்தாக்கம் நிறைந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர ட்ராக்டர்கள், இலத்திரனியல் மற்றும் என்ஜினில் இயங்கும் நீர் பம்பிகள், சோளம் கதிரடிக்கும் கருவிகள், ஸ்பிரேயர்கள் மற்றும் மேலும் பல விவசாய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றமைக்காக பரந்தளவில் கௌரவிப்பைப் பெற்றுள்ளது.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற சுவையூட்டிகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் அத்தியாவசிய சமையல் எண்ணெய் வகைகள் உற்பத்தியாளரான Frey + Lau உடனான தனது பங்காண்மையின் மூலமாக, சுவைத் தெரிவுகளிலும் சியோக்கா காலடி பதித்துள்ளது. நாட்டில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை கம்பனிகளுக்கு வாசனைத்திரவியங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை சியோக்கா முன்னெடுத்து வருகிறது.

மேலும், சியோக்காவின் துணை நிறுவனமான Koala (பிரைவட்) லிமிடட் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த, கண்கவர் உள்ளக அலங்கார மற்றும் வடிவமைப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நவீன அலங்கார முறைகளுக்கு பொருத்தமான வீட்டுத்தளபாடங்கள் மற்றும் நவநாகரீக தளபாடங்கள் பலவற்றைக் கொண்ட புதிய காட்சியறையை அண்மையில் Koala அங்குரார்ப்பணம் செய்தது. 

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் 100 வருடங்கள் பழமையான Flatware மற்றும் Buffet விருந்தோம்பல் மற்றும் விற்பனை வர்த்தக நாமங்களான Onedia®, Sant Andrea® ஆகியவற்றையும் உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் தெரிவுகளான Vicrilla® வகைகளையும் Koala பெருமையுடன் விநியோகித்து வருகிறது. 

பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனம் எனும் வகையில், சூழலுக்கு பாதுகாப்பான செயற்பாடுகளை பின்பற்றும் இந்நிறுவனம், FunderMax® தயாரிப்புகளின் ஏக விநியோகஸ்த்தர்களாக செயற்படுகிறது. 

மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களிலிருந்து Fundermax® இன் பிரத்தியேகமான வெளிப்புற உயர் அழுத்த லெமினேட் படல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை வீடுகள் மற்றும் வியாபாரங்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவுகளாக அமைந்துள்ளன.

எதிர்காலத்தை கருதும் போது, இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபார ஸ்தாபனங்களில் ஒன்றாக திகழும் வகையில் சியோக்கா வளர்ச்சியைடைந்து வருகிறது.