ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்: ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்கிறார் கெஹெலிய

Published By: J.G.Stephan

14 Aug, 2020 | 01:22 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட  ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு  தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திற் கொடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே காணப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சரவையினால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வின் கலந்து கொண்ட போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தனது அரசியல் பயணத்தில் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும் நேர்மையாகச் செயற்பட்டு தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சிற்கு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

ஊடகத்துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளை வெவ்வேறாகப் பிரித்து அவதானிக்க வேண்டியதில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனினும் தற்போது உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைச்சரவையினால் கூட தீர்மானங்களை எடுக்க முடியாது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஆணைக்குழுக்கள் சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே வாக்களிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கக் கூடிய அதிகாரம் நேரடியாக தேர்தல்கள் ஆணையாளரையே சேரும்.

எனவே தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஊடகத்துறைசார்ந்தவர்கள் கோரிக்கையினை முன்வைத்தால் ஆணைக்குழு அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06