கோழி இறைச்சியில் கொரோனா தொற்று - சீனாவில் பரபரப்பு

Published By: Digital Desk 3

14 Aug, 2020 | 03:48 PM
image

சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்து பார்த்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோழி இறைச்சியானது, பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்தது என தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி சீன அரசு தரப்பில் கூறுகையில், “இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கடலுணவு பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் ‘பேக்கேஜ்’ மேற்பரப்பை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தின் வடக்கு நகரமான யெண்டாயில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பொருட்களின் 3 ‘பேக்கேஜ்’ மாதிரிகளை சோதித்ததில் அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளதாக அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை சமூக ஊடகமான வெய்போவில் யெண்டாய் நகர அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதே போன்று ஈக்குவடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த இறால் பொதி மாதிரியை உஹூ நகரில் சோதித்ததில் அதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த தகவல்கள் சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனம் "மக்களுக்கு கொரோனா வைரஸ் உணவு அல்லது உணவு பொதியிலிருந்து பரவுவது மிகவும் சாத்தியமில்லைஎன தெரிவித்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூற்றின்படி, உணவு பொருட்கள், உணவு பொதி அல்லது பைகளில் இருந்து வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது கொரோனா வைரஸ் பெரும்பாலும் ஒருவருக்கு சுவாச துளிகளால் பரவுகிறது என்பதை இரு அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கொரோனாவை ஒரு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொடுவதன் மூலம் பிடிக்க முடியும் - உணவு அல்லது உணவு பொதி உட்பட - அதில் வைரஸ் உள்ளது - பின்னர் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால், அது முக்கியமானது என்று கருதப்படவில்லை சி.டி.சி படி, வைரஸ் பரவுகிறது.

"உணவு அல்லது உணவு பொதி மூலம் சுவாச நோய்கள் பரவும் வைரஸ்கள் இன்று வரை எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா வைரஸ்கள் உணவில் பரவாது; கொரோனா மற்றவர்களுக்கு ஒரு விலங்கு அல்லது மனிதன் மூலமே பரவும்" என  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17