'ஆராேக்கியமான போக்குவரத்து சேவையை மேற்கொள்வேன்': போக்குவரத்து அமைச்சர் காமினி லாெக்குகே

Published By: J.G.Stephan

14 Aug, 2020 | 01:04 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். அதற்காக புதிய பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவோம் என போக்குரவத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காமினி லொக்குகே நேற்று பத்தரமுள்ளையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் செளபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தை முன்னுக்கொண்டுசெல்ல மக்கள் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி இருக்கின்றனர். மக்கள் ஆணையை பயன்படுத்திக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்தை வெற்றியடைச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் நாட்டின் போக்குவரத்துதுறை மிகவும் முக்கியமானதொன்றாகும். பொது மக்களுடன் தொடர்புபட்டதொன்று என்றபடியால், ஆரோக்கியமான  பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். அதற்காக புதிய பஸ்களை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்திக்கின்றோம். 

அத்துடன் மக்கள் போக்குவரத்துக்கு புதிய பஸ்கள் இறக்குமதி செய்யும் எந்த திட்டமும் இல்லை. கொரோனா தொற்று காரணமாக  நாட்டில் சுற்றுலாதுறை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுற்றுலா துறைக்காக புதிய பஸ்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அந்த பஸ்களை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இருக்கின்றோம். அதேபோன்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அமைச்சில் பல முக்கியமான வேலைத்திட்டங்களை தொடங்கி இருந்தார். அந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50