நாமல் ராஜபக்ஷ 18 ஆம் திகதி  தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்

Published By: Digital Desk 3

14 Aug, 2020 | 12:32 PM
image

(எம் .எம்.சில்வெஸ்டர் )

நாட்டின்  18 ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராக  பதவியேற்ற நாமல் ராஜபகஷ  எதிர்வரும் 18 ஆம் திகதியன்று  காலை விளையாட்டுத்துறை அமைச்சில்  தனது கடமைகளை  பொறுப்பேற்கவுள்ளார். 

தேசிய விளையாட்டு அணி ஒன்றின் அங்கம் வகித்த மற்றும் தேசிய விளையாட்டு அணி ஒன்றின் தலைவராக செயற்பட்ட மற்றும்  தேசிய விளையாட்டு அணியொன்றுக்கு அணித்தலைவராக  செயற்பட்ட ஒருவர் நாட்டின் விளையாட்டுத்துறை  அமைச்சராக  பொறுப்பேற்பது  இலங்கை  வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

விளையாட்டுத்துறை மற்றும்  இளைஞர்கள் சேவைகள் அமைச்சராக கடந்த 12 ஆம்  திகதியன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்துகொண்ட நாமல் ராஜபக்ஷ  அமைச்சரவை அந்தஸ்த்துக்கொண்ட  அமைச்சராக விளங்குகிறார்.

றக்பி விளையாட்டில் சிறந்து  விளங்கிய நாமல் ராஜபக்ஷ , 2004 இல்  இலங்கை இளையயோர்  றக்பி அணியின்  தலைவராகவும், 2005 இல்  கல்கிஸ்ஸை   பரி. தோமாவின் கல்லூரி றக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன் 2013 இல்  இலங்கை தேசிய றக்பி அணியின்  தலைவராகவும் செயற்பட்டுள்ளார் .

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் , தேசிய இளைஞர்கள் சேவைகள் உள்ளிட்ட 8  நிறுவன அமைப்புக்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின்  கீழ் இயங்கும்.

நாட்டின் முதலாவது விளையாட்டுத்துறை அமைச்சராக  வீ.ஏ.சுகததாச  செயற்பட்டதுடன் இறுதியாக   டலஸ் அழகப்பெரும கடமையாற்றியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24