திருமலையில் கூடுகிறது தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு!

13 Aug, 2020 | 11:43 PM
image

(ஆர்.ராம்)

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11மணிக்கு திருகோணமலையில் உள்ள அக்கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளது. 

இதனை தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியதோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். 

இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தினை உடன் கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளர். 

எனினும் அரசியல் குழு கூட்டத்தினை அடுத்தே மத்திய குழு கூட்டத்தினை கூட்டுவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளதோடு கட்சியின் செயலாளரான கி.துரைராஜசிங்கமும் மத்திய குழு கூட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். 

நடைபெற்று நிறைவடைந்த 9ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 9ஆசனங்கள் கிடைத்திருந்ததோடு தேசிய பட்டியலில் ஒரு ஆசனமும் கிடைத்திருந்தது. 

தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. எனினும் அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவ இழப்பினால் அம்மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவயை நியமித்தாக வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு சம்பந்தனின் வழிகாட்டிலில் கட்சியின் செயலாளரான கி.துரைராஜசிங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு த.கலையரசனின் பெயரை பரிந்துரைத்திருந்தார். அதற்கான உத்தியோக பூர்வமான வர்த்தமான அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா பரிந்துரைக்கப்பட வேண்டும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ ஆகியன அறிவித்திருந்ததோடு, தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்டக்கிளையும் அதே தீர்மானத்தினை எடுத்திருந்தது. 

எனினும், சம்பந்தன் எடுத்த தீர்மானம் மாற்றப்படவில்லை என்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலையரசனின் பெயரும் மீளப்பெறப்பட்டிருக்கவில்லை. 

இவ்வாறான நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தான் சசிகலா ரவிராஜையே தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிப்பதற்கு எண்ணங்கொண்டிருந்ததாகவும், வடக்கு கிழக்கில் இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாததன் காரணத்தால் அவ்விதமான நிலைப்பாட்டினை எடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆத்துடன் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தன்னை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துமாறும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், கட்சியின் முக்கிஸ்தர்களும் வலியுறுத்துவதாகவும் மேலும் தெரிவித்திருந்தார். 

ஏவ்வாறாயினும், தனக்கோ, பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கோ அறிவிக்கப்படாது, கலந்தாலோசிக்கப்படாது தேசியப் பட்டியல் நியமனம் தீர்மானிக்கப்பட்டு விட்டதாவும் கூறியுள்ளார். 

இதேவேளை, கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவு விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட சிவஞானம் சிறிதரன் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தினை ஏற்பதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார். 

அத்துடன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சிறிதரன் தலைமையேற்பதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார். 

தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான பெயர் பரிந்துரையில் ஆரம்பித்த உட்கட்சி மோதல் தற்போது தலைமைத்துவ மாற்றம் வரையில் சென்றிருக்கின்றது. 

இவ்வாறான பின்னணியிலேயெ எதிர்வரும் சனிக்கிழமை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. மேலும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் 50பேர் கொண்ட மத்திய குழுவிலும், பதவி நியமனங்கள் 150பேர் கொண்ட பொதுச்சபையிலுமே தீhமானிக்கப்படுகின்றன. 

இந்நிலையில், தற்போது. மாவை.சோ.சேனாதிராஜா தரப்பும், சுமந்திரன்,சிறிதரன், செயலாளர், கி.துiராஜசிங்கம் உள்ளிட்டவர்களை கொண்ட அணியும் மேற்படி இரண்டு கட்டமைப்பிலும் தமது பலம் பலவீனங்களை ஆராய ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமன்றி தமது அணிகளை பலப்படு;துவதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டு வருவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04