ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இன்­றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இச் சந்­திப்பில் வட­மா­காண அமைச்­சர்க­ளான ப.சத்­தி­ய­லிங்கம், டெனிஸ்­வரன், பொ.ஐங்­க­ர­ நேசன், குரு­கு­ல­ராஜா ஆகி­யோரும் பங்­கேற்­க­வுள்­ளனர். குறித்த சந்­திப்­பின்­போது வட­மா­காண அபி­வி­ருத்தி மற்றும் சம­கால அர­சியல் நிலை­மைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.


இந்­நி­லையில் நாடா­ள­விய சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வா­தச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­காலச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் விடு­தலை செய்யும் விடயம் தொடர்பில் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் முழு­மை­யாக தலை­யீடு செய்ய வேண்­டு­மென வட­கி­ழக்கில் வாழும் தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள் கோரி­யுள்­ளனர்.


அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளுடன் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் கடந்த மாதம் 12ஆம் திகதி எமது உற­வுகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு ஜனா­தி­பதி வழங்­கிய வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி அப்­போ­ராட்­டத்தை தற்­கா­லி­க­மாக கைவிட்­டி­ருந்­தனர்.


எனினும் ஜனா­தி­ப­தியின் வாக்­கு­று­திக்கு அமை­வாக கடந்த ஏழாம் திகதி வரையில் எவரும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­காத நிலையில் மீண்டும் நாடா­ளா­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த எமது உற­வுகள் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

தற்­போது அண்­மைய காலத்தில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கே பிணை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள், விசா­ர­ணை­க­ளின்றி உள்­ள­வர்கள், தண்­ட­னை­ய­ளிக்­கப்­பட்­ட­வர்கள், மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­ட­வர்கள் எனப் பலர் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் விடு­தலை தொடர்­பாக எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­தங்­களும் வழங்­கப்­ப­ட­வில்லை.


ஒவ்­வொரு தட­வையும் எமது உற­வுகள் உண்­ணா­வி­ர­த­மி­ருப்­பதும் வாக்­கு­று­திகள் வழங்­கப்படுவதும் சாத­ர­ண­மாக நடை­பெறும் விடயம் போன்­றா­கி­விட்­டது. ஆகவே வடக்கு மக்களின் ஆணைபெற்றவராகவிருக்கும் தாங்கள் (வடமாகாண முதலமைச்சர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதுடன் இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வொன்றை பெறுவது தொடர்பாக அவரிடத்தில் வலியுறுத்தலைச் செய்யவேண்டுமெனக் கோரியுள்ளனர்.