கிடைக்க பெற்ற ஒரு ஆசனம் அனைத்து தரப்பிற்கும் சாபகேடு - அத்துரலியே ரத்ன தேரர்

13 Aug, 2020 | 06:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

   அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க    வேண்டும் என்பதை தீர்மானிக்கம் அதிகாரம் எனக்கு மாத்திரமே உண்டு.  கிடைக்க பெற்ற ஒரு ஆசனம் அனைத்து தரப்பிற்கும் சாபகேடாக மாறியுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை முழுமயாக இல்லாதொழித் து  அனைத்து இன  மக்களும்   பொது சட்டத்திற்கு அடிபணிய  வேண்டும் என்பதற்காகவே  இடம் பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டோம். தேர்தலில்போட்டியிடுவதற்கு  அங்கிகரிக்கப்பட்ட கட்சி ஒன்று   இல்லாத காரணத்தினால் அபேஜன பல வேகய  கட்சியில் போட்யிட்டோம்.  ஞானசார தேரர்  உட்பட  தேர்தலில் போட்டியிட தீர்மானித்தவர்கள் அனைவரும்   இக்கட்சியில் கூட்டணியமைத்தோம்.  அப்போது   கூட்டணியின் பொதுச்செயலாளராக  நான்  நியமிக்கப்ட்டேன்.  

  தேர்தலில் போட்டியிடுதல் மற்றும்  அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம்  கூட்டணிக்கு உண்டு என்பதை எழுத்து மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு  அறிவித்துள்ளோம். இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் எமது கொள்கைகளை   மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எமக்கு  ஊடகங்களில்  வாய்ப்பு  கிடைக்கப் பெறவில்லை.

  ஞானசார தேரர் உட்பட  தேர்தலில் போட்டியிட தீர்மானித்த  அபேஜன பலவேகய அமைப்பின் உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் நேரடியாக சென்று  கொள்கைகளை  வெளிப்படுத்தினார்கள்.  அதுவே  67  ஆயிரம் வாக்குகளை எமக்கு பெற்றுக் கொடுத்தது   பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  குருநாகலை மாவட்டத்தில் போட்டியி  தாக்கல் செய்த வேட்புமனு  இரத்து செய்யப்பட்டது. அதிக  வாக்குகளை  பெறுவதற்கு  எதிர்பார்த்த 4 மாவட்டங்களின் வேட்பு  மனுக்கல் இரத்து செய்யப்பட்டமை  எமக்கெதிராக  முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியாகும்.

 பாரிய  சவால்களுக்கு மத்தியில் பொதுத்தேர்தலில் 67  ஆயிரம்   வாக்குகளை பெற்றோம். எமக்கு   தேசிய பட்டியலில்  1 ஆசனம்   ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது அனைவருக்கும்  சாபக்கேடாக மாறியுள்ளது   அமைக்கப்பட்ட கூட்டணியின் பிரகாரம்   தேசிய பட்டியல் தொடர்பில்   தீர்மானம்  எடுக்கும் அதிகாரம் அபே ஜனபல வேகய கட்சிக்கு  கிடையாது. தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கு மாத்திரமே   உண்டு.

 இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை  இல்லாதொழிப்பது   சவால்மிக்கது    நாட்டில் அனைத்து இன   மக்களும் பொது சட்டத்திற்கு  அடிபணிய வேண்டும்.  என்பதற்காக  இந்த தேசிய  பட்டியல் ஆசனத்தை  பயன்படுத்துவோம். வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40