புதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

Published By: Vishnu

13 Aug, 2020 | 01:40 PM
image

(நா.தனுஜா)

புதிதாக ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினால் நாம் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், எம்மோடு இருக்கின்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்ற பயம் மேலோங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு இன அழிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி கனரஞ்சனி யோகதாஸன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 16 ஆக இருந்த கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் 10 ஆக வீழ்ச்சிகண்டிருக்கிறது. இனியேனும் உள்ளகப் பிளவுகளையும், சுயலாப நோக்கங்களையும் தவிர்த்து இந்தப் பிரதிநிதிகள் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதை முன்நிறுத்தி செயற்படுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். இப்படியொரு பின்னணியில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.

நாங்கள் தனிநாடு கோரி ஆயுதமேந்திப் போராடவில்லை. மாறாக காணாமலாக்கப்பட்ட எமது சொந்தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவே போராடுகின்றோம். இதற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதற்காக 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 2020 ஆம் ஆண்டாகியும் எவ்வித தீர்வையும் வழங்க முடியவில்லை. மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் வழங்குகின்ற அவர்களால் நீதியை வழங்குவதென்பது இனியும் சாத்தியப்படாது. ஆகவே இறுதி நம்பிக்கையாக எமக்கான நீதியை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19