புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் அடுத்த புதன்..!

Published By: J.G.Stephan

13 Aug, 2020 | 11:23 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின்  முதலாவது அமைச்சரவை  கூட்டம்  எதிர்வரும் 19ம் திகதி புதன்கிழமை  ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெறவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர்  அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்   கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்  என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பொறுப்பேற்றல் நேற்று இடம்பெற்றது. 28, அமைச்சுக்கள். 40 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 25 மாவட்டங்களுக்கான  குழு தலைவர் பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய அமைச்சரவையின் கன்னி  கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி  கோத்தாபய   ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெறவுள்ளது. வழமைக்கு மாற்றீடாக பல புதிய அம்சங்கள் முதலாவது அமைச்சரவையில்  முன்னெடுக்கப்படவுள்ளது.

25 அமைச்சர்கள்  மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்களும் எதிர்வரும் 17ம் திகதி அதாவது   திங்கட்கிழமைக்கு முன்னர்   தங்களின் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  ஆலோசனை வழங்கியுள்ளார். 16ம் திகதிக்கு முன்னர்  அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் தங்களின் கடமைகளை  துரிதமாக பொறுப்பேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  9வது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை 20ம்  திகதி கூடவுள்ளது.  சபாநாயக்கர் மற்றும் பிரதி  சபாநாயக்கர்  ஆகிய  முக்கிய  பதவிகள்  குறித்து அன்றையதினம் கவனம் செலுத்தப்படும்.  சபாநாயகர் பதவிக்கு  பல்வேறு தரப்பினரது பெயர்கள் இதுவரையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04