கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Published By: Digital Desk 3

13 Aug, 2020 | 12:11 PM
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13.08.2020) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற பொதுஜன பெருமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.

அதனடிப்படையில், நேற்று (12.08.2020) தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கி வைத்தார்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றையதினம் புதன்கிழமை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08