நான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை  அனுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளை இளைஞர்கள் முடி வெட்டும் நிலையமொன்றில் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்கப்பட்ட சிறைச்சாலை காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.