ருவான்வெல்ல - மஹாகம்மான பகுதியில் களனி ஆற்றில் மூழ்கி நபரொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் 45 வயதான கொட்டாவ பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை   மாரவில பகுதியில்  கிரிஸ்தவ தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற நபரொருவர் காணாமல் போயுள்ளர்.

குறித்த நபர் கொழும்பு- குமாரரத்ன பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.