விம்பிள்டன் டென்னிஸ் : பலத்த போட்டியில் மிலோஸை வீழ்த்தி சாம்பியனானார் முர்ரே

Published By: MD.Lucias

11 Jul, 2016 | 10:41 AM
image

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஹென்டி முர்ரே 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு கிழமைகளாக லண்டனில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2ஆம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஹென்டி முர்ரேவும், 7ஆம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிக்கும் (கனடா) மோதினர். அரைஇறுதியில பெடரருக்கு அதிர்ச்சியளித்த ராவ்னிக் மிகுந்த நம்பிக்கையுடன் களம் புகுந்தார்.

ஆனால் உள்ளூர் நாயகன் முர்ரேவின் அதிரடியான ஆட்டத்துக்கு ராவ்னிக்கால் முழுமையாக ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ராவ்னிக் கடும் சவாலளித்தார். 

முர்ரே சாம்பியன்

2 மணி 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஹென்டி முர்ரே 6–4, 7–6 (7–3), 7–6 (7–2) என்ற நேர் செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை சொந்தமாக்கினார். 

இதன் மூலம் ராவ்னிக்கின் கனவு சிதைந்த போதிலும், கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையுடன் வெளியேறினார்.

29 வயதான முர்ரேவுக்கு இது 2ஆவது விம்பிள்டன் மகுடமாகும். ஏற்கனவே 2013ஆம் ஆண்டில் விம்பிள்டனை முதல்முறையாக கையில் ஏந்தினார். மொத்தத்தில் அவருக்கு இது 3ஆவது கிராண்ட்ஸ்லாம் ஆகும். 2012ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன்

பெண்கள் ஒற்றையரில் பட்டத்தை வென்று சாதனை படைத்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இரட்டையர் பிரிவிலும் ஆதிக்கத்தை நிலை நாட்டினார். அவரும், அவரது சகோதரி வீனஸ் வில்லியம்சும் இணைந்து இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை எதிர்கொண்டனர். 

விறுவிறுப்பான இந்த மோதலில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றனர். இவர்கள் கூட்டாக இணைந்து பெற்ற 14–வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49