அமெரிக்காவில் விமானப்படை தளத்தில் பயணிகள் விமானம் தவறுதலாக தரை இறங்கிய சம்பவத்தினால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் உள் நாட்டு விமானமொன்று 130 பயணிகளுடன் மின்னெபொலீசில் இருந்து சவுத் டகோபாவுக்கு புறப்பட்டு சென்றது. 

ஆனால் அதற்கு முன்னதாக 10 மைல் தொலைவில் உள்ள எல்ஸ்வோர்த் என்ற விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. இதனால் விமான பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 2 விமான நிலையங்களின் ஓடுதளங்கள் ஒரே மாதிரியான திசையில் இருப்பதால் வித்தியாசம் தெரியாமல் இங்கு இறக்கியதாக விமானத்தின் விமானி தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.