ஐ.பி.எல். 2020 டைட்டில் ஸ்பொன்சராகிறது  சாமியாரின் பதஞ்சலி நிறுவனம்

Published By: Digital Desk 3

11 Aug, 2020 | 02:43 PM
image

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பொன்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2018 முதல் 2022 வரையிலான டைட்டில் ஸ்பொன்சர் உரிமத்தை சீனாவின் வீவோ நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் லடாக் பிரச்சினைக்குப்பிறகு சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இந்த பிரச்சினை பெரிதாகிய சமயம் ஐ.பி.எல். ஸ்பொன்சராக வீவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்தது. இதனால் சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்த நெட்டிசன்கள் ஐ.பி.எல். போட்டியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின. 

இதனால், ஐ.பி.எல். ஸ்பொன்சர்ஷிப்பில் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வீவோ நிறுவனமும்-பிசிசிஐ-யும் விலகின. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். டைட்டில் ஸ்பொன்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள ஐ.பி.எல். 2020 ஸ்பொன்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐ.பி.எல். ஸ்பொன்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத பொருட்கள் தொடர்பான விற்பனையை செய்துவரும் பதஞ்சலி நிறுவனத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமானம் இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 329 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35