அம்பாறையில் மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டது !

Published By: Digital Desk 4

10 Aug, 2020 | 12:44 PM
image

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் குறித்த நபரின் தலை மாத்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை (8) வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.

பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். இவ்வேளையில் குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளன.

இவ்வாறு இழுத்துச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல்போனவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட தலை கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை  பொலிஸாரினால்  விசாரணைகள் இடம்பெற்றன.

இவ்வாறு இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என சடலமாக மீட்கப்பட்டவரை சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதவான்  நீதிவானின்  உத்தரவிற்காக மீட்கப்பட்ட தலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38