இலங்கை வங்கியின் புதிய தலைமை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் நியமனம்

Published By: Digital Desk 3

10 Aug, 2020 | 11:25 AM
image

இலங்கை வங்கியின் புதிய தலைமை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக அரச துறையிலும் தனியார் துறைகளிலும் 22 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றிய சிறந்த அனுபவம் பெற்ற திரு.சமீர லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு அவர் சணச அபிவிருத்தி வங்கியில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக ஆறு வருடங்களாக பணியாற்றியதுடன் செலான் மேர்சன்ற் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பான் ஏசியா வங்கி ஆகிய வங்கிகளில்  சந்தைப்படுத்தல் முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். 

ஓய்வூதியம் பெற்ற அரச ஊழியர்களை வங்கிகளின் நிதியுதவித் திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அரச சேவைகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக கடன் வழங்கும் விசேட திட்டத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக செயற்பட்ட சமிர லியனகே உயிரிழந்த, அங்கவீனமுற்ற மற்றும் காணாமல் போன இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்காக வங்கி உதவித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் முன்னணியிலிருந்து செயற்பட்டவர்.

இவர் சணச அபிவிருத்தி வங்கியில் பதவி வகித்த காலப்பகுதியிலேயே பிரசித்திபெற்ற சர்வதேச Brand Finance ஸ்தாபனத்தால் சணச அபிவிருத்தி வங்கி அபிவிருத்தி துறை சார்ந்த வங்கிகளிடையே 45ஆம்  இடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 

UNESCO Srilanka ஆணைக்குழவால் 2003ஆம்  ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இலங்கை சார்பில் தெரிவுசெய்யப்பட்டு பங்குபற்றியிருந்த இவர் வங்கித்துறையில் புதிய உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு  அனுபவங்களையும் பெற்றுள்ளதுடன் அதன் மூலம் அவர் பணியாற்றிய நிறுவனங்களுக்கு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். 

ஐக்கிய இராச்சியத்தின் (UK) சந்தபை்படுத்தல் கல்வி நிறுவனத்தின் முதுமாணி டிப்ளோமா பட்டம் பெற்ற சமிர லியனகே இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் ஆயுட்கால உறுப்பினராவார். இவர் Future Minds கல்வி மற்றும் வழிகாட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்வில் பொது முகாமையாளராக செயற்பட்டிருந்ததுடன் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பிரபல பழைய மாணவராகிய இவர் கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார். 

இவ்வாறு சந்தைப்படுத்தல், கல்வித்துறையிலும் வங்கித்துறைகளிலும்  பிரசித்திபெற்று விளங்கும் சமிர லியனகே தற்போது இலங்கை வங்கியில் புதிய தலைமை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57