அமெரிக்காவில் இரு வாரத்தில் 97,000 சிறுவர்களுக்கு கொரோனா

Published By: Vishnu

10 Aug, 2020 | 09:10 AM
image

ஜூலை கடைசி இரண்டு வாரங்களில் சுமார் 97,000 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சிறுவர் சுகாதார ஸ்தாபனம் (American Academy of Pediatrics) ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜூலை 16 முதல் ஜூலை 30 வரையான காலக் கட்டத்திலேயே அமெரிக்காவில் 97,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக ஸ்தாபனம் தனத அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றுள் 338,000 க்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் ஆவர்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் அமெரிக்காவில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாவினால் உயிரிழந்தும் உள்ளனர்.

சிறுவர்களுக்கு கொரோனா பரவுவதில் பெரிதும் பங்களிப்பு செய்யும் காரணயாக பாடசாலைக் கல்வி முறைகள் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க அமெரிக்காவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,044,769 ஆக காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 162,938 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கி வருகிறது.

அதன்படி இதுவரை 19,780,612 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சர்வதேச ரீதியில் 729,768 ஆக காணப்படுவதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52