ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து 14 பேர் தெரிவு

Published By: Digital Desk 4

09 Aug, 2020 | 07:32 PM
image

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து  14பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கின்றனர். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்தும் மூன்று மாவட்டங்களில் தனித்தும் போட்டியிட்டிருந்தன. 

அதன் பிரகாரம் பொலன்னறுவை, குருணாகலை, காலி, பதுள்ளை,அனுராதபுரம், அம்பாந்தோட்டை, கேகாலை, மொனராகலை, கம்பஹா மற்றும் வன்னி மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டும்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பனர்கள் 14பேர் தெரிவாகி இருக்கின்றனர். 

அதனடிப்படையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, ஷான் விஜேலால், சான்த்த பண்டார, சாமர சம்பத் தசநாயக்க, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜகத் புஷ்பகுமார, லசன்த்த அழகியவன்ன, சாரதி துஷ்மன்த, நிமல் சிறிபால டிசில்வா, காதர் மஸ்தான் மற்றும் யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தெரிவாகி இருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37