உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி

Published By: Digital Desk 4

09 Aug, 2020 | 11:06 AM
image

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்ததையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தைச் ஓட்டிச் சென்று நெல் வரப்புக் கட்டில் ஏறும்போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் இவர் உழவு இயந்திரத்தின் கீழே நசுங்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையக்கு கொண்டு செல்லும் நோக்கில் எடுத்துச் செல்கையில் இடைவழியில் மரணித்துள்ளார்.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44