கதையின் நாயகனாக அறிமுகமாகும் இணையதள நட்சத்திரம்

08 Aug, 2020 | 05:06 PM
image

டிஜிட்டல் திரை நட்சத்திரமான ராம் நிஷாந்த், அறிமுக இயக்குனர் போத்தன் ராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ் திரை உலகிற்கு நாடக மேடையிலிருந்து ஏராளமான நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 

அதனைத் தொடர்ந்து கூத்துப்பட்டறையில் இருந்து ஏராளமான நடிகர்கள் தயாராகி, தமிழ் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார்கள். 

நட்சத்திர நடிகர்களின் வாரிசுகள் நடிகராக அறிமுகமாகி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து சின்னத்திரையிலிருந்து நடிகர்கள் சினிமாவிற்கு அறிமுகமாகி நட்சத்திர அந்தஸ்தில் தற்போது உலா வருகிறார்கள். 

இந்த வரிசையில் தற்போது 'டிஜிட்டல் திரை ' நடிகர்கள் என பெயரிடப்படும் யூட்யூப் என்னும் இணைய தளத்தில் இருந்தும் நடிகர்கள் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி தங்களது முத்திரைகளை பதித்து வருகிறார்கள். 

இவர்களில் தற்போது நடிகர்கள் விஜய் பரத்வாஜ், ஷா ரா, ராஜ்மோகன் ஆறுமுகம்,  நடிகை ஹரிஜா, நடிகர் ஆர். ஜே. விக்னேஷ் காந்த் என பலரை குறிப்பிடலாம். 

இந்தப் பட்டியலில் அடுத்ததாக நடிகர் ராம் நிஷாந்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  இவர் ஏற்கனவே இயக்குநர் கார்த்திக் கோபாலன் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தில் குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இவர் பிரபலமான ப்ளாக் ஷீப் என்னும் யூட்யூப் தளத்தில் வெளியாகும் படைப்புகளில் நடிகராக நடித்து வருகிறார்.

ஹைலைட் சினிமா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் ராம் நிஷாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் போத்தன் ராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா, அண்மையில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37