2021 ஆம் ஆண்டு உலக இருபது 20 போட்டி இந்தியாவில்

08 Aug, 2020 | 04:45 PM
image

2021 ஆம் ஆண்டு உலக இருபது 20 கிரிக்கெட் போட்டி  இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7 ஆவது உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி வேறுவழியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. 

இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தியது.

ஆனால், 2021 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க இந்திய கிரிக்கெட் சபைக்கு விருப்பம் இல்லை. 

ஏனெனில், 2022 ஆம் ஆண்டில் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை நடத்தினால், அதற்கு அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இந்திய தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐ.சி.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ‘வீடியோ கொன்பரன்ஸ்’ மூலம் நேற்றைய தினம் நடைபெற்றது. 

இந்தியா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

இதன் முடிவில் 2021 ஆம் ஆண்டு உலக இருபதுக்கு 20 போட்டியை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், ஒத்திவைக்கப்பட்ட உலக இருபதுக்கு 20 போட்டியை 2022 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மகளிருக்கான 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் மார்ச் 7 ஆம் திகதி வரை நியூஸிலாந்தில் நடத்தப்படவிருந்தது. 

கொரோனா அபாயத்தால் இதற்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த உலகக் கிண்ண போட்டியையும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவல்கள் ஐ.சி.சி. வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41