ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு 64 புதிய உறுப்பினர்கள்

Published By: Digital Desk 3

08 Aug, 2020 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒன்பதாவது  பாராளுமன்றத்துக்கு இம்முறை 64  புதிய   பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

அதில்  53 பேர்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  சார்பில் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்கள். 

கம்பஹா மாவட்டத்தில்   6 பேர்    பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு     வெற்றிப் பெற்றுள்ளார்கள்.      கலாநிதி  நாலக  கொடஹேவா,   சஹன் பிரதீப்,  கோகிலா ஹர்ஷனி குணவர்தன, நளின்  ருவன்ஜீவ பிரனாந்து,   மிலான் சஜித் ஜயதிலக,    உபுல் மகேந்திர ஆகியோர் கம்பஹா மாவட்ட புதிய  பிரதிநிதிகளாவர்.

கொழும்பு மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக   மேஜர்  பிரதீப்  உதுகொட,   மதுர விக்ரமநாயக்க,   பிரேமநாத்  சிறி  தொலவத்த   , ஜகத் குமார ஆகியோர் பொதுஜன பெரமுன  சார்பில்   போட்டியிட்டு  வெற்றிப் பெற்றுள்ளார்கள்.

களுத்துறை மாவட்ட புதிய   பாராளுமன்ற உறுப்பினர்களாக   சஞ்ஜீவ   எதிரிமான்ன, அனுப  பஸ்குவல்   ஆகியோர்    தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.  அநுராதபுர மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட  மூவர்  பாராளுன்றத்துக்கு    தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

கலாநிதி  சன்ன     ஜயசுமன,   உத்திக  பிரேமரத்ன,  எச்.  நந்தசேன,   கே.  ஜி.  எஸ்.   குமார சிறி ஆகியோரும்,            ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட    ரோஹன  பண்டார  விஜயசுந்தரவும்    என   நால்வர் உள்ளடங்குகிறார்கள்.

கண்டி  மாவட்டத்தில்   பொதுஜன பெரமுன  சார்பில் போட்டியிட்ட  வசந்த யாப்பா பண்டார,  குணதிலக    ராஜபக்ஷ,  உதயன   சமிந்த  கிரிதிகொட  ஆகியோர்  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில்    ஜீவன் தொண்டமான்,  மருதபாண்டி   ராமேஷ்வரன்,  நிமல்    பியதிஸ்ஸ   ஆகியோரும்.     ஐக்கிய மக்கள்  சக்தியில்   உதய  குமாரும்    வெற்றிப் பெற்றுள்ளார்கள்.

காலி  மாவட்டத்தில்     பொதுஜன பெரமுனசார்பில் சம்பத் அதுகோரல,  இசுறு தொடங்கொட,   சான் விஜயநாத்  மாத்தறை மாவட்த்தில்   நிபுண ரணவக்க,   கருணாதாஸ   கொடித்துவக்கு, வீரசுமன  வீரசிங்க ஆகியோர்   பொதுஜன பெரமுன  சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில்   உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ஷ     குருநாகலை  மாவட்டத்தில்   குனபால  ரத்ன சேகர,  அசங்க  நவரத்ன,   சமன்பிரிய  ஹேரத்,  சுமித உடுகுபுர   ஆகியோர்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  சார்பில்  போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா   பொதுஜன பெரமுன  சார்பில்     கேகாலை  மாவட்டத்தில்     ராதிகா விக்ரமசிங்க, சுதத்   மஞ்சுள, உதய  காந்த  குணதிலக  ஆகியோரும்,  இரத்தினபுரி மாவட்த்தில் கமில்  விலேகொட,  அகில எல்லாவெல,  மற்றும்   மதீனா     பிரசாந்த் சொஸ்சா   ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22