தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் - பிரதமர்

Published By: Digital Desk 3

07 Aug, 2020 | 11:43 AM
image

 (இராஜதுரை ஹஷான்)

பொதுதேர்தலுக்கான  முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்    பொது மக்கள்   நாட்டின் பொதுச்சட்டம் மற்றும் தற்போது  அமுல்படுத்தப்பட்டுள்ள  சுகாதார பாதுகாப்பு    வழிமுறைகள்   ஆகியவற்றை முழுமையாக  பின்பற்றி      ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றினை   அமைதியாக கொண்டாட வேண்டும்.   கிடைக்கப் பெற்றுள்ள  வெற்றியை அர்த்தமுடையதாகவும்,   கௌரவாகவும் கொண்டாடுமாறு  பிரதமர்      மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தனது உத்தியோகப்பூர்வ முகப்பு புத்தகத்தில்   மேற்கண்டவாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

சவால்களை   வெற்றிக் கொண்டு புதிய   ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும், இலக்கினை   வெற்றிக் கொள்ளவும் இரவு  பகல் பாராது  அயராது  உழைத்த     நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி   கூற  கடமைப்பட்டுள்ளோம். 

குருநாகல்  மாவட்டத்தில் போட்டியிட்ட  எனக்கு விருப்பு வாக்குகளை வரலாற்றில்  என்றுமில்லாத அளவிற்கு     வழங்கிய  குருநாகல் மாவட்ட மக்களுக்கு  மனதார நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ என்மீதும், எனது  தரப்பினர் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை     பலப்படுத்தவும்,  செயற்படுத்தவும் தொடர்ந்து பொறுப்புடன் செயற்படுவேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.        கிடைக்கப் பெற்றுள்ள  அமோக வெற்றியை     நாட்டு மக்கள் அனைவரும்   பொது சட்டம்,  தற்போது  அமுலில் உள்ள சுகாதார   பாதுகாப்பு அம்சங்களை  முழுமையாக பின்பற்றி  எத்தரப்பினருக்கும் பாதிப்பு  ஏற்படாமல்  அமைதியாக  கொண்டாட வேண்டும்.

தோற்றம் பெற்றுள்ள   அனைத்து மட்ட சவால்களையும்  வெற்றிக் கொண்டு சிறந்த  அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள்    எமக்கு    ஆணையை   வழங்கியுள்ளார்கள். கிடைக்கப் பெற்ற மக்களாணையை மதித்து  சிறந்த   ஆட்சியை  முன்னெடுப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27