(க.கிஷாந்தன்)

ஹட்டன் திருச்சிலுவை ஆலய புனித அன்னம்மாளின் 187வது வருடாந்த திருவிழா இன்று நடைபெற்றது.

கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களோடு பங்குதந்தை லெஸ்லீ பெரேரா ஆகியோரால் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சுரூப ஊர்வலம் ஆலயத்தில் இருந்து ஹட்டன் பிரதான பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து புனித அன்னம்மாளின் சுரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு சிங்களம் தமிழ் இருமொழிகளிலும் அதன்பின் 10.30 மணியளவில் விசேட திருப்பலியும் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

இதில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

1829ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்குதந்தை லெஸ்லீ பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.