பெய்ரூட் குண்டுவெடிப்பு;16 துறைமுக ஊழியர்கள் கைது - லெபனான் நீதிபதி

Published By: Digital Desk 3

07 Aug, 2020 | 11:45 AM
image

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்  பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக துறைமுக ஊழியர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த வெடி விபத்தின் காரணமாக தலைநகரின் பெரும் பகுதி பேரழிவிற்குட்ப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பெய்ரூட்டின் துறைமுகத்தில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டொன் அம்மோனியம் நைட்ரேட்  தீப்பிடித்தமையினாலே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெடிவிபத்தில் சுமார் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 50,000 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு நான்கு நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக லெபனானின் வெளியுறவு அமைச்சர் வானொலியில்நேற்று  வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், இராணுவ நீதிமன்ற நீதிபதி பாடி அகிகி ஒரு அறிக்கையில், பெய்ரூட்டின் துறைமுகத்தில் 18 ஊழியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் 16 பேர்  விசாரணையில் உள்ளனர். 16 பேரில் துறைமுக சுங்க அதிகாரிகள், பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மேலாளர்கள்

அதிக வெடிக்கும் பொருட்களின் இவ்வளவு பெரிய சரக்கு எவ்வாறு பல ஆண்டுகளாக பாதுகாப்பற்றதாக இருந்திருக்கும் என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை லெபனானுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52