காலியில் ரமேஸ் பத்திரன, மாத்தறையில்  நிப்புன ரணவக்க  முதலிடங்களில்!

07 Aug, 2020 | 02:39 AM
image

(எம். எப். எம். பஸீர்,   இராஜதுரை  ஹஷான்)

   காலி,   மாத்தறை ஆகிய  மாவட்டங்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள்  வெளியிடுப்பட்டன .  அதன் பிரகாரம் காலி மாவட்டத்தில் வைத்தியர்  ரமேஷ் பத்திரன. 250,118   வாக்குகளுடனும், மாத்தறை  மாவட்டத்தில் 131,010  வாக்குகடளுடன் நிப்புண ரணவக்கவும் முதலிடத்தை  பிடித்துள்ளார்கள்.  அவ்விருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டவார்களாவர்.

  காலி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்கள்.  கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்  ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு  ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  இந்நிலையில்   விருப்பு வாக்குகள் பிரகாரம்   காலி  மாவட்டத்தில்  ரமேஸ்  பத்திரனவுக்கு அடுத்தப்படியாக    ஸ்ரீ லங்கா பொதுஜின பெரமுன சார்பில்  சம்பத் அதுகோரல,   128,332 விருப்பு வாக்குகளுடன் இரணடாம் இடத்தையும்  மொஹான் பி. டி.  சில்வா 11,626  மூன்றாம்ட இடத்தையும்,  சந்திம வீரக் கொடி 84984 வாக்குகளுடன்  நான்காம் இடத்தையும். இசுறு  தொடங்கொட 71,266 வாக்குகளுடன்   5ம் இடத்தையும்   சான் விஜயலால் டி சில்வா    67,793  வாக்குகளுடன்  6ம்  இடத்தையும், கீதா குமபர சிங்க   63358  வாக்குகளுடன் 7ம் இடத்தையும்    பிடித்துள்ளனர்.

  காலி  மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்  கயந்த கருணாதிலக, மனுச  நாணயக்கார  முதலிடத்தை பிடித்துள்ளனர்.  கயந்த 50,097  விருப்பு வாக்குகளையும்,  மனுஷ  நாயயக்கார 47,399  விருப்பு  வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

 மாத்தறை மாவட்டத்தை பொறுத்தவரையில் அதிக  விருப்பு வாக்குகள்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  நிபுண  ரணவக்கவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அவர் பெற்றுக் கொண்டுள்ள  வாக்குகளின் எண்ணிக்கை 131,010 ஆகும்   அவருக்கு அடுத்தப்படியாக அக்கட்யின் பட்டியலில் 114,319 வாக்குகளுடன் கருணாதாஸ கொடித்துவக்கு,     103,533 வாக்குகளுடன்   டலஸ்  அழகப் பெரும,  96,033 வாக்குடளுடன் காஞ்சன  விஜயசேகர  80599 வாக்குகளுடன்  மஹிந்த யாப்பா  அபேவர்தன் 77,968 வாக்குகளுடன் வீரசுமன வீரசிங்க  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  

மாத்தறை  மாவட்டத்தில் ஐக்கிய  மக்கள் சக்திக்கு ஒரு  ஆசனம் மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்  அக்கட்சியின்   விருப்ப  வாக்குப்பட்டியல் அடிப்படையில் முதலிடத்தில் புத்திக பத்திரன  உள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  புத்திக   பெற்றுக் கொண்டுள்ள   வாக்குகள்  44,839 ஆகும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58