ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்கை எண்ண எடுத்த முயற்சி சட்டவிராதமானது

Published By: Vishnu

06 Aug, 2020 | 11:38 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்கை எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி சட்ட விரோதமானதாகும். இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருக்கி்ன்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அரசியலமைப்பின் பிரகாரம் மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலொன்றின்போது ஆசனம் ஒன்றுக்கு உரிமை போரமுடியுமாவது, 5வீதம் என்ற குறைந்தபட்ட விகிதாசாரத்தை பெற்றுக்கொள்ளும் கட்சி அல்லது குழுவுக்கு மாத்திரமாகும்.

என்றாலும் இந்த சட்டத்தை மீறி சட்டவிராதேமாகவும்  விஞ்ஞான ரீதியற்ற முறையொன்றை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட பிரிவிவைச்சேர்ந்த ஒருசிலர் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு முயற்சித்திருப்பதாக நம்பகமான தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 5 வீத வாக்குகளை எட்டமுடியாத நிலையில், மாவட்டத்தின் மொத்த பெறுபேற்றை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பிரிப்பதன் மூலம் பெறப்படும் பகுதியை இலக்காகக்கொண்டு, சட்டவிராேதமாகவும் அரசியலமைப்புக்கு முரணாகவும் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றது.

இந்த மோசமான நடவடிக்கை தொடர்பாக கொழும்பு மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, விருப்பு வாக்கு எண்ணப்படுவதாகவும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் தொகை தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார். என்றாலும் எமது விவாதமாக இருப்பது, சட்ட முறைப்படி இவ்வாறு விருப்பு வாக்கு எண்ண முடியாது. இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருப்பதுடன் சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38