நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவி வருகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.

பாடசாலையை சேர்ந்த பகுதிகளிலேயே குறித்த நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் நுளம்புகள் பெருகி வரும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த நோயாளர்கள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.