சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் இலங்கை தடுமாற்றம்

Published By: Robert

10 Jul, 2016 | 10:03 AM
image

இறு­திக்­கட்ட போரின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க் குற்­றங் கள் குறித்து விசா­ரணை செய்யும் விசார ணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் ஜெனீவா தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்ள நிலையில் தற்­போது நிலைமை நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நிலை­மையைச் சீர் செய்­வ­தற்­காக முன் னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­­துங்க உள்­ளிட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உயர்மட்­டத்­தி­ன­ருக்­கி­டையில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 32 ஆவது கூட்­டத்­தொ­டரில் பொறுப்புக் கூறல் விட­யத்தில் இலங்­கையின் முன்­னேற்­றங்கள் குறித்து அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் பாராட்­டுக்­களை தெரி­வித்­தப்­போ­திலும் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் உள்­ள­டக்கம் தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தனர். அதா­வது இலங்­கையின் இறு­திக்­கட்ட போரின் போது நடைப்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்­றங்கள் தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டங்­க­ளான கலப்பு நீதி மன்­ற­மாக அமைய வேண்டும் என ஜெனீவா தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சேன கலப்பு நீதி மன்­றத்­திற்கு கடும் எதிர்ப்பை பல முறை வெளி­யிட்­டி­ருந்தார். மறுப்­புறம் வெளி­வி­வ­கார அமைச்சர் கலப்பு நீதி மன்­றத்தை ஆத­ரிக்கும் வகை­யிலும் நல்­லாட்சி இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் ஜெனீ­வாவில் தெரி­வித்­தி­ருந்தார். அதே போன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிலைப்­பாடும் ஜெனீவா தீர்­மா­னத்­திற்கு ஒத்­துப்­போ­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் மாறுப்­பட்ட நிலைப்­பா­டு­களும் கருத்து மோதல்­களும் மேலோங்­கி­யுள்­ளன. தான் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் வரையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திப்­ப­தில்லை என நேற்று முன்­தினம் பாணந்­துறை நக­ர­சபை விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்குள் மேலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உயர் மட்ட பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11