கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இல்லை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 

Published By: J.G.Stephan

06 Aug, 2020 | 01:57 PM
image

(நா.தனுஜா)

2020 பொதுத்தேர்தலின் போது பின்பற்றப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் திருப்திகரமானவையாக அமைந்துள்ளன என்றும், எனவே தேர்தல் செயற்பாடுகளால் மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இல்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 2020 பொதுத்தேர்தலின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகப் பின்பற்றப்பட்ட சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் திருப்தியளிப்பவையாக அமைந்திருந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாடளாவிய ரீதியில் குறித்த எண்ணிக்கையிலான வாக்களிப்பு நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகவும், அவர்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் சொற்பளவான வாக்களிப்பு நிலையங்களில் பதிவான சில சம்பவங்களைத் தவிர பெரும்பான்மையான வாக்களிப்பு நிலையங்களில் சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தேர்தல் அதிகாரிகளால் முறையாகப் பின்பற்றப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் வைத்திய நிபுணர் சாகர கன்னங்கர குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்த வாக்காளர்களுக்கும் தொற்றுநீக்குவதற்கான (கைகழுவுதல், சனிட்டைஸர் பயன்பாடு உள்ளிட்டவை) வசதிகள் தயார்படுத்தப்பட்டிருந்ததுடன் அவை முறையாகப் பின்பற்றப்பட்டன. ஆகவே இந்தத் தேர்தல் செயற்பாடுகளால் நாட்டில் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் நிலைமைகள் எவையும் பதிவாகவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் சுட்டிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58