மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் - வாக்களித்த பின் பிரதமர் தெரிவிப்பு

05 Aug, 2020 | 06:02 PM
image

 (இராஜதுரை  ஹஷான்)

 பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் முழுமையாக  வெளியான  பின்னர்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராக  உள்ளோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்   பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய  கட்டாயம்  இம்முறை   காணப்படுகிறது.   பொருளாதார  சவால்களை எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்.  

Image

 என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மெதமுல்ல   டி. ஏ  ராஜபக்ஷ வித்தியாலயத்தில்  வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Image

அவர்   மேலும் குறிப்பிடுகையில்,

  வாக்குரிமையின்  பெறுமதியை புரிந்துக் கொண்டுள்ள  மக்கள்  இம்முறை  வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்கள்.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை  கைப்பற்றி  பலமான  அரசாங்கத்தை இம்முறை    ஸ்தாபிப்பது  கட்டாயமாகவுள்ளது.

  பொதுத்தேர்தலில் தேர்தல்  பெறுபேறுகள்  முழுமையாக வெளியான  பின்னர்    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  தலைமையிலான  அரசாங்கத்தை   ஸ்தாபிப்பதற்கு  தயாராக உள்ளோம்.  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு  69  இலட்ச  மக்கள்   முழுமையான ஆதரவினை  வழங்கியுள்ளார்கள்.   சுபீட்சமான எதிர்கால கொள்கை   திட்டத்தை    பொதுஜன பெரமுன  தலைமையிலான அரசாங்கத்தில்      முழுமையாக செயற்படுத்துவோம்.

  பொருளாதார   ரீதியில்  எழுந்துள்ள  சவால்களை எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்.   இதனை காட்டிலும்  பாரிய  சவால்களை மிக சுலபமாக வெற்றிக் கொண்டுள்ளோம்.    தேர்தல் ஆணைக்குழு,  சுகாதார    பிரிவினர் வகுத்த சுகாதார  பாதுகாப்பு வழிமுறைகளை    பொது மக்கள் முறையாக பின்பற்றுகின்றமை  மகிழ்ச்சிக்குரியது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02