'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய

Published By: J.G.Stephan

05 Aug, 2020 | 02:37 PM
image

(நா.தனுஜா)

நான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எனக்கு 65 வயதாகினாலும், அது ஒரு பிரச்சினையல்ல. மாறாக வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆகவே மக்கள் அச்சமின்றி தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இம்முறை நானும் வாக்களித்திருக்கிறேன் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்வதற்காக இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நான் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு வாக்காளராக வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றையதினம் தான் சென்றேன். ஏனெனில் எனக்கு 65 வயதாகினாலும், வயது ஒரு பிரச்சினையல்ல. வாக்களிப்பு நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆகவே அச்சமின்றி தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

அனைத்து இளைஞர்களும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும். தமது பெற்றோர், சகோதர, சகோதரிகளையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தவேண்டும். வயது முதிர்ந்தவர்களை வாக்களிப்பதற்காக  வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வாருங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு பிரஜையும் 'வாக்களித்தல்' என்ற தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த முடியும். உங்களுடைய வாக்கு என்பது உங்கள் உரிமை, உங்கள் குரல், உங்கள் எதிர்காலம் மற்றும் உங்களுடைய எதிர்காலமாகும். அதனைத் தவறாது பயன்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51