வெலிகந்த வடமுனெ பகுதியில் நபரொருவர் தனது சகோதரனை தாக்கி கொலைசெய்துள்ளார்.

இளைய சகோதரர் ஒருவர் தனது மூத்த சகோதரனை கல்லால் தாக்கி கொலைசெய்துள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இளைய சகோதர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்தின் போது காயமடைந்த இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.