சீனாவின் கடற்போக்குவரத்துத் துறையுடன் இலங்கை இணையும் பட்சத்தில் இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை உருவாகும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேன் யு தெரிவித்தார்.

நேற்று (08) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற சந்திப்பு நிறைவுபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனை வேன் யு தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 5 வருடங்களில் கடல் போக்குவரத்தின் அபிவிருத்தியை சீனா முன்னெடுக்கவுள்ளதாகவும், அதனால் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கடல் போக்குவரத்து கேந்திரமாக மாற்றுவதற்கு சீனா தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குமென அவர் மேலும் தெரிவித்தார்.