பாரதூரமான சம்பவங்கள் இடம் பெற்றால் வாக்கெடுப்பு சூன்யமாக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தல்!

03 Aug, 2020 | 10:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 பொதுத்தேர்தலை ஜனநாயக முறையிலும்  பாதுகாப்பான முறையிலும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  100  சதவீதம் முழுமைப் பெற்றுள்ளன. வாக்களார்கள் கொரோனா  வைரஸ் தாக்கம் குறித்து  அச்சம் கொள்ளாமல்   வாக்களிக்கலாம்.  80 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என  எதிர்பார்க்கிறோம். வாக்காளர்கள்  கடந்த காலத்தை காட்டிலும்  அறிவார்ந்தவர்களாக உள்ளார்கள்

ஆகவே வேட்பாளர்கள் தங்களின் இருப்பினை பாதுகாத்துக் கொள்ள  தேர்தல்  சட்டத்தினை முறையாக  செயற்படுத்த வேண்டும். 

  வாக்குகளை வெளியிடும் வரையில் பொதுத்தேர்தல்தல் தொடர்பில் அனைத்து அதிகாரங்களும் தேசிய  தேர்தல்கள் ஆணைக்குழுக்குழுவுக்கு உண்டு என தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார்.

  வாக்களிப்பு மத்திய  நிலையங்களில் பாரதூரமான சம்பவங்கள் இடம் பெற்று வாக்களிப்பு தொடர்பான கேள்வி நிலை எழுந்தால்  குறித்த  பிரதேசத்துக்கான  வாக்களிப்பு  பிறிதொரு நாளில் நடத்தப்படும் .  வன்முறைகள்  இடம்பெறாத அளவிற்கு  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது பல் துலக்குவதற்கு அல்ல ஆகவே  ஜனாநாயகத்தை பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுமையாக  பயன்படுத்தலாம் என்றும்   குறிப்பிட்டார்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற  விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் நாளை  மறுதினம் காலை 7 மணிமுதல்  நாடுதழுவிய ரீதியில்  ஆரம்பமாகவுள்ளது.  1,62,63,885  வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.  12,774 தேர்தல்  தொகுதிகளில் 12,985 வாக்களிப்பு மத்திய  நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும் 11,102 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  ஒரு  தேர்தல் தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வாக்களிப்பு   மத்திய நிலையங்கள் உள்ளடங்குகின்றன.

  25 மாவட்டங்களில்  உள்ள 71 தேர்தல்  தொடர்பான   காரியாலங்களுக்கு  இன்று  காலை  8.30   மணி தொடக்கம்  9 மணி வரையான  காலப்பகுதிக்குள்  வாக்குப் பெட்டி பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படும்.    வாக்கு பெட்டியின் பாதுகாப்பிற்கு ஒரு  பொலிஸாரும், ஒரு சில பிரதேசங்களுக்கு இ.ரு பொலிஸாரும்   ஈடுப்படுத்தப்படுவார்கள்.

   வாக்குப் பெட்டிகள்  கிருமி தொற்று நீக்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு     பாதுகாப்பான முறையில்  ஒப்படைபக்கப்படும்  நாளை  மாலை  7 மணியளவில்   நாளைய மறு தினம் வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் எவ்வாறு  செயற்பட வேண்டும் என பிரத்தியேக ஒத்திகை 11,985 மத்திய  நிலையங்களில்  இடம் பெறும்.   வாக்கு எண்ணும்  பொறுப்பு உயர்கல்வி மற்றும் கல்வி அமைச்சின் பொறுப்பாகக்த்தின் கீழ்  காணப்படுகின்றது. ஆகவே எவரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

வாக்களிப்பு தினத்தில் விசேட பாதுகாப்பு

  நாடு தழுவிய ரீதியில்  தேர்தல்கள் சுமுகமான முறையில்  இடம் பெற வேண்டும்  என ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட  ஆலோசனை  வழங்கியுள்ளார்கள்.    பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு    பாதுகாப்பு   அமைச்சு முழுமையான ஒத்துழைப்பினை  வழங்கியுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தெற்கில் ஒரு  சில  பகுதிகளிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கான  வாய்ப்புக்கள் உண்டு என இரகசிய தகவல்கள் பாதுகாப்பு  அமைச்சின் ஊடாக  கிடைக்கப் பெற்றுள்ளன.

   கிழக்கில் சம்மாந்துறை, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய  பிரதேசங்களிலும், வடக்கில் தெரிவு செய்யப்பட்ட இடங்களிலும்  விசேட  பாதுகாப்பு அதிரடி படையினரை பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு ஈடுப்படுத்துமாறு  பாதுகாப்பு அமைச்சிற்கு  எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம்.  தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுப்படுத்தப்பட மாட்டார்கள். பொலிஸார் மற்றம் சிவில் பாதுகாப்பு   தரப்பினர் மாத்திரமே  வாக்களிப்பு   மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும்  இடங்களில் பாதுகாப்பு காரணிகளுக்கு மாத்திரம் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

     ஜனநாயகமான முறையில்  தேர்தல் இடம் பெற வேண்டும் என்பதற்கு பல  சவால்களை இதுவரையில் எதிர்க்கொண்டுள்ளோம். ஆகவே  வாக்களிப்பு நிலையங்களில் முரண்பாடுகள்,   வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வாக்களிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டால் அப்பிரதேசத்துக்காள  வாக்களிப்பு இடை நிறுத்தப்பட்டு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.   பொலிஸாருக்கு துப்பாக்கி  வழங்கப்பட்டுள்ளது. பல்துலக்குவதற்கு அல்ல ஜனநாயகத்தை  பாதுகாப்ப அதிகாரத்தை முழுமையாக செயற்படுத்தலாம்.

வேட்பாளருக்கு  எதிரான முறைப்பாடு

   பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து தேர்தல் பிரசாங்கள் நிறைவுப் பெற்ற காலம் வரை வேட்பாளருக்கு எதிரான  முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.  வேட்பாளர்களை காட்டிலும் வாக்காளர்கள்  கடந்த   காலத்தை விட தற்போது  அறிவார்ந்தவர்களாக உள்ளார்கள்.  இரகசியமான முறையில்   வாக்கினை சேகரிக்க முற்படும்  வேட்பாளர்கள்  ஜனநாயகத்தை மதித்து தேர்தல் சட்டத்தை  பின்பற்ற வேண்டும். முறைக்கேடாக நடந்து  அரசியல் இருப்பினை  இழக்க வேண்டாம்.

வேட்பாளருக்கு  வழங்கப்பட்ட மரணதண்டனை  தீர்ப்பு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு  நீதிமன்றினால் மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.  இவ்விடயம் தொடர்பில்  இரு நாட்களுக்குள் தீர்மாங்களை தனித்து எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிக்கு கிடையாது. தேர்தலின் பெறுபேறுகள் வெளியான பிறகே  இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம்செலுத்தப்படும்.

வாக்காளர்கள் வாக்களிக்கும் முறை

  வாக்காளர்கள் முதலில்  அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின்  சின்னத்திற்கு அல்லது தான்  விரும்பும் சுயேட்சை வேட்பாளருக்கு  வாக்களிக்க  வேண்டும்   அதன் பின்னர்  விருப்பு வாக்கினை  மூவருக்கு வழங்கலாம், அல்லதுவிருப்பு  வாக்கினை  ஒருவருக்கே   வழங்கலாம்.  வாக்குகள்  நிராகரிக்கப்படாத  வகையில்  வாக்களிக்க  வேண்டும் என்பதில் வாக்களார்கள் அவதானமாக இருக்க வேண்டும்.  வாக்களிப்பு மத்திய  நிலையத்துக்கு   அரசாங்க ஆட்பதிவு திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட  அடையாள அட்டை, அல்லது     கடவுச்சீட்டு  என  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 7  ஆளனி   அடையாளப்பத்திரங்களை கொண்டு வர முடியும். தேசிய அடையாள   அடடை இல்லாதவர்கள் கிராதம சேவகரால் வழங்கப்பட்டு   பிரதேச  செயலாளரினால் உறுதிப்படுத்திய  தற்காலிய  அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்.   கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக    காலவதியான    சாரதி அனுமதி பத்திரத்தை   இம்முறை   பயன்படுத்த முடியும்.

 சுகாதார பாதுகாப்பு அம்சங்கள்

 கொவிட் - 19  வைரஸ்  தாக்கம் தொடர்பில் வாக்காளர்கள்  எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்.   பாதுகாப்பிற்கு   முழுமையான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும்.  வாக்களிக்கும் போது விசேட  பாதுகாப்பு அமைசங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாக்களார்கள் வாக்களிப்பு நிலையங்களுக்க கருப்பு   அல்லது  நீல  நிறத்திலான பேனை கொண்டு வர வேண்டும். பெனை கொண்டு வராவிடின்  கிருமி தொற்று  நீக்கப்பட்ட பேனை வழங்கப்படும். ஆகவே  வைரஸ்   தொற்று தொடர்பில்  அச்சம் கொள்ள வேண்டாம்.

     பொதுத்தேர்தல்  ஜனநாயகமான முறையில்  இடம் பெறும்  பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டள்ளது. ஆகவே   வாக்காளர்கள் அனைவரும்   வாக்களிக்க வேண்டும்.  ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்டுள்ள உரிமையினை   முறையாக  பயன்படுத்தி ஜனநாயகத்தை  வெற்றிப்பெற   செய்ய வேண்டும் என்பதில் அக்கறை  கொள்ளுங்கள்.  வாக்கு எண்ணும் நடவடிக்கைகள்  6ஆம் திகதி  இடம்பெறும் அன்றைய தினமும் மறுநாளும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.  

எந்நிலையிலும் மோசடிகள் இடம்பெறாது.  ஊடங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சமூக   வலைத்தளங்கள் தொடர்பான பொறுப்பினை   எமக்கு ஏற்க முடியாது.  இருப்பினும் எல்லை  மீறவும் முடியாது என்றார.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53